Tamil Song - 492 - Unga Kirupai Ennai
உங்க கிருபைதான் என்னை
தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை
நடத்துகின்றது (2)
கிருபையே, கிருபையே - மாறாத
நல்ல கிருபையே
1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபையிது (2)
2. சோர்ந்து போன நேரத்திலெல்லாம்
என்னை சூடிநந்து கொண்ட
கிருபையிது
3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபையிது
4. ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்தி வைத்த கிருபையிது!