Tamil Song - 600 - Urugaayoo Nenjame
உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்
கரங்கால்கள் ஆணியேறித் (2)
திருமேனி நையுதே
2.மண்ணுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக் குருசில் ஏறினார்
3.தாக மிஞ்சி நாவறண்டு
தங்கமேனி மங்குதே ஏகபரன்
கண்ணயர்ந்து எத்தனையாய்
ஏங்குறார்
4.மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்
5.வல்ல பேயை வெல்ல
வானம் விட்டு வந்த தெய்வம்
பாராய் புல்லர் இதோ நன்றி
கெட்டுப் புறம் பாக்கினார் அன்றோ