Tamil Song - 602 - Kalvaari Anpai Ennidum Velai
கல்வாரி அன்பை எண்ணிடும்
வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள்
இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
1. கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே (2)
2. சிலுவையில் வாட்டி வதைத்தனரே
உம்மை செந்நிறமாக்கினரே
அப்போதும் அவர்க்காய்
வேண்டினீரே
அன்போடு அவர்களை
கண்டீரன்றோ
3. எம்மையும் உம்மைப்போல்
மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரைமட்டும்
தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின்
கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் (2)