Tamil Song - 85 - Manathurukum Deivamey Yesaiya
மனதுருகும்
தெய்வமே ஏசையா
உம்மை
மனதாரத் துதிப்பேன்
ஸ்தோத்தரிப்பேன்
நீர்
நல்லவர் சர்வ வல்லவர்
உம்
இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம்
அன்பிற்கு அளவே இல்லை
அவை
காலை தோறும் புதிதாயிருக்கும்
1.மெய்யாக
எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை
சுமந்துகொண்டீர் ஐயா
2.எங்களது
மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால்
சுகமானோம் உந்தன்
3.தேடி
வந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய்
தினம்
தினம் அற்புதம் செய்தீர் ஐயா
4.சாபமான
முள்முடியை தலைமேலே
சுமந்து கொண்டு சிலுவையிலே
வெற்றி சிறந்தீர் ஐயா