மன்னிப்புத் தாருமையா என் மணவாளனே | Tamil Christian Song

மன்னிப்புத் தாருமையா என் மணவாளனே

எனக்குள் வாருமையா என் எஜமானனே

மணவாளனே மணவாளனே

எஜமானனே என் இயேசுராஜனே


பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா

உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா

என் ஆண்டவரே என் சிருஷ்டிகரே

பாவம் போக்கப் பலியானீரே

உந்தன் பாதம் சரணமையா - நான்


எந்தன் மனதில் ஆறுதலில்லை

என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா

என் ஆண்டவரே என் ஆறுதலே

யாரிடம் சொல்வேனையா

உம்மிடந்தான் சொல்வேனையா - நான்

 

உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்

புது ஆவியாலே நிரப்பிடுமையா

என் புகலிடமே என் புதுபெலனே

உந்தன் சாயலாக மாற்றுமே

உந்தன் மார்பிலே சாய்ந்திடுவேன் - நான்



கருத்துரையிடுக

0 கருத்துகள்