வெறுத்த என்னை தேடி வந்து
அற்புதம் செய்தாரே
இயேசு அற்புதம் செய்தரே - 2
1. நொண்டியை கிடந்த என்னை தேடி வந்தார்
நொடி பொழுது தொட்டு சுகம் எனக்கு தந்தார்
பாவத்திலே அமிழ்ந்த என்னை தேடி வந்தார்
பாவம் நீங்கி புதுவாழ்வு எனக்கு தந்தார்.
அவர் அன்பை நான் எப்படி பாடுவேன்
என் மரண படுக்கைய மாற்றின,
அவர் அன்பை நான் எப்படி புகழுவேன்..
2. தோல்வியிலே துவண்ட என்னை தேடி வந்தார்
ஜெயமெடுக்க பரிசுத்த ஆவி தந்தார்
பெலவீனனான என்னை தேடி வந்தார்
பெலன் கொடுத்து அவரை சொல்ல கிருபை தந்தார்
அவர் அன்பை நான் எப்படி பாடுவேன்
என் மரண படுக்கைய மாற்றின,
அவர் அன்பை நான் எப்படி புகழுவேன்
0 கருத்துகள்