Aagaadhadhu Edhuvumillai – Ummaal | ஆகாதது எதுவுமில்லை – உம்மால் Lyrics

ஆகாதது எதுவுமில்லை – உம்மால்

ஆகாதது எதுவுமில்லை – உம்மால் ஆகாதது எதுவுமில்லை அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் 1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும் 2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு நாமத்தில் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும் 3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும் 4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும் 5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும் 6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும் 7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும் 8. கானவ+ரில் வார்த்தை சொல்ல கப்பர்நாகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும் 9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
Aagaadhadhu Edhuvumillai – Ummaal Aagaadhadhu Edhuvumillai Agilam Anaiththaiyum Undaakki Aalugindreer 1. Thudhi Seiyyath Thodangiyadhum Edhirigal Thangalukkul Vettundu Madiyach Seidheer Ummaal Aagum, Ellaam Ummaal Aagum 2. Alangaara Vaasalile Alangola Mudavan Andru Nadandhaane Yesu Naamaththil Ummaal Aagum, Ellaam Ummaal Aagum 3. Kolum Kaiyumaaga Pizhaikkach Sendraar Yaakkobu Perugach Seidheer Perungootamaai Ummaal Aagum, Ellaam Ummaal Aagum 4. Kanneerai Kandadhaale Kallarraikkuch Sendravanai Karam Pidiththuth Thookki Vitteer Ummaal Aagum, Ellaam Ummaal Aagum 5. Eesaakku Jebiththadhaale Rebekkaal Karuvutru Irattaiyargal Petredutthaale Ummaal Aagum, Ellaam Ummaal Aagum 6. Eliyaavin Vaarththaiyaale Saaripaath Vidhavai Veettil Ennai Maavu Kuraiyavillaiye Ummaal Aagum, Ellaam Ummaal Aagum 7. Jeba Veeran Dhaaniyaelai Singangalin Kugaiyinile Sedhamindrik Kaappaatrineer Ummaal Aagum, Ellaam Ummaal Aagum 8. Kaanaavil Vaarththai Solla Kappharnaagoom Siruvan Ange Sugamaanaan Anneerame Ummaal Aagum, Ellaam Ummaal Aagum 9. Thanneeraal Jaadigalai Keezhpadindhu Nirappinadhaale Thiraatchai Rasam Vandhadhaiyaa Ummaal Aagum, Ellaam Ummaal Aagum