Eppodhum ummodudhaan | எப்போதும் உம்மோடுதான் Lyrics

எப்போதும் உம்மோடுதான்

எப்போதும் உம்மோடுதான் உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானே என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே ஆராதனை ஆராதனை (2) ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே விருப்பமில்லை – எனக்கு 2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின் பெலனே நீர்தானையா உம் சித்தம் போல நடத்துகிறீர் மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம் 3. காருண்யத்தின் கயிறுகளால் கட்டி என்னை இழுத்துக் கொண்டீர் பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம் பெரியவனாக்கி விட்டீர் – என்னைப் 4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கி நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என் கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து கைவிடாமல் காப்பாற்றினார் – இதுவரை 5. உம்மைத்தானே அடைக்கலமாய் அண்டிக் கொண்டேன் அனுதினமும் புகலிடமே என் மறைவிடமே உம் புகழ்தனை சொல்லி வருவேன்
Eppodhum ummodudhaan Um valakkaram ennodudhaan En vaanchaiyellaam neerthaane En vaazhkai ellaam um pugazhthaane Aaraadhanai aaraadhanai (2) Aayul irukkumvarai (en) – Eppodhum 1. Paralogathil ummaiyallaamal Enakku yaarundu Boologathil ummaith thavira Vere viruppamillai – enakku 2. Endrendraikkum en ullaththin Belane neerthaanaiyaa Um siththam pola nadaththugireer Magimaiyil etrukkolveer – um 3. Kaarunyaththin kayirugalaal Katti ennai izhuththuk kondeer Peranbinaal anaiththuk kondeer – um Periyavanaakki vitteer – ennaip 4. Kazhuththil ulla nugam neekki Nimirndhu nadakkach seidheer – en Katruk koduththeer karam pidiththu Kaividaamal kaappaatrineer – idhuvarai 5. Ummaiththaane adaikkalamaai Andik konden anudhinamum Pugalidame en maraividame Um pugazhthanai solli varuven