Thunbamaa Thuyaramaa | துன்பமா துயரமா Lyrics

துன்பமா துயரமா

துன்பமா துயரமா அது தண்ணீர் பட்ட உடை போன்றதம்மா காற்றடிச்சா வெயில் வந்தா காய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் உனக்காக உதயமானார் உலகத்திலே நம்பி வா, வெளிச்சம் தேடி வா உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது 2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார் இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார் எழுந்து வா, போதும் பயந்தது…உன் புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது 3. உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார் உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார் நீ சுமக்க இனி தேவையில்லை ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது 4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை கூப்பிடு, இயேசு இயேசு என்று உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார்
Thunbamaa Thuyaramaa Adhu Thanneer Patta Udai Pondradhammaa Kaatradichaa Veyil Vandhaa Kaayndhu Poyvidum Kalangaadhe 1. Yesudhaan Needhiyin Kathiravan Unakkaaga Udhayamaanaar Ulagaththile Nambi Vaa, Velichcham Thedi Vaa Un Thukka Naatkal Indrodu Mudhindhadhu 2. Izhandhu Ponadhai Thedi Yesu Vandhaar Ilaippaarudhal Tharuven Endru Sonnaar Ezhundhu Vaa, Podhum Bayandhadhu… Un Puyalkaatru Indrodu Oyndhadhu 3. Un Thukkangal Yesu Sumanthukondaar Un Pinigal Ellaam Etrukkondaar Nee Sumakka Ini Thevaiyillai Oru Sugavaazhvu Innaalil Thulirththadhu 4. Raththam Sindhuthal Illaamal Mannippillai Yesu Naamam Sollaamal Meetpu Illai Kooppidu, Yesu Yesu Endru Un Kuraigalellaam Niraivaakki Nadathiduvaar