Nambikkaiyinaal nee vaazhvu peruvaai | நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் Lyrics

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் தழும்புகளால் நீ சுகமானாய் தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய் 2. ஆடையை தொட்டால் நலம்பெறுவேனே அறிக்கை செய்து சுகமடைந்தாள் ஒருத்துளி சந்தேகமில்லாமலே ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் 3. ஆபிரகாம் சாராள் குழந்தைப்பெற ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால் வாக்குதத்தம் செய்தவர் நம்பதக்கவர் ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் 4. கட்டாந்தரையிலே நடப்பது போல் கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால் எரிகோ மதில்கள் விழுந்தனவே ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால் 5. உலகிலே இருக்கும் அவனை விட உனக்குள் இருப்பவர் பெரியவரே துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார் துரிதமாய் வெற்றி காணச் செய்வார் 6. மலையைப் பார்த்து கடலில் விழு என்று சொன்னால் நடந்திடுமே உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே நம்பினால் எல்லாம் நடந்திடுமே
Nambikkaiyinaal nee vaazhvu peruvaai Nanbane nee bayappadaadhe Bayam vendaam thigil vendaam Padaiththavar unnai nadaththich selvaar 1. Adhisayak Kalvaari siluvaiyile Anaiththaiyum seydhu mudiththuvittaar Thazhumbugalaal nee sugamaanaai Thayavinaal marupadi pirandhuvittaai 2. Aadaiyai thottaal nalam peruvene Arikkai seydhu sugamadaindhaal Oruththuli sandhegamillaamale Odivaa Yesu indru sugam tharuvaar 3. Aabiragaam Saaraal kuzhandhai pera Aatral petradhu nambikkaiyinaal Vaakkuththatham seydhavar nambaththakkavar Ekkamellaam eppadiyum niraivetruvaar 4. Kattaantharaiyile nadappadhu pol Kadalai kadandhanar nambikkaiyinaal Eriko madhilgal vizhundhanave Ezhunaal oorvalam vandhadhinaal 5. Ulagile irukkum avanai vida Unakkul iruppavar periyavare Thunai nindru unakkaai yuththam seyvaar Thuridhamaai vetri kaanach seyvaar 6. Malaiyaip paarththu kadalil vizhu Endru sonnaal nadandhidume Unnaale koodaadhadhu ondrumillaiye Nambinaal ellaam nadandhidume