உம் பாதம் சரணடைந்தேன் | Tamil Christian Song

உம் பாதம் சரணடைந்தேன்

உம சித்தம் செய்திட அர்ப்பணித்தேன் 


    வந்தேன் உம் சமூகம் 

    தந்தேன் இத்தருணம் 


எஜமானனே நான் உம் அடிமை 

அன்பினால் நீர் எந்தன் கரம் பிடித்தீர் 

உலகத்தின் கவர்ச்சியோ மேன்மைகளோ

பிரித்திடுமோ உந்தன் சிநேகம் விட்டு 

பிரித்திடாதே உந்தன் சிநேகம் விட்டு - வந்தேன் 


குயவன் உம் கையில் களிமண் நான் 

வணணைந்திடும் உந்தனின் சித்தம் போல 

ஆட்கொள்ளும் தேவா அனலாக்கும் 

சீர்படுத்தும் என்னை ஸ்திரப்படுத்தும் 

ஆட்கொள்ளும் என்னை அனலாக்கும் - வந்தேன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்