நிலையில்லா உலகத்திலே
நிலைகுலைந்து அலைந்திட்டேனே
தேடினேனே பூமியிலே
கிடைத்ததெல்லாம் குப்பைதானே!!
வீணாய் பாழாய் நான் போனேன்
மனம் நொந்து போனேன்
கண்களை விண்ணோக்கி இயேசுவைக் கண்டேன்
என் மகனே(ளே) என்றாரே(2)
பயப்படாதே நீ கலங்கிடாதே நீ!
நான் உன்னைத் தெரிந்து கொண்டேன்
தேடி வந்தேன் உன்னை மீட்க
ஜீவன் தந்தேன் பாவம் தீர்க்க
என் பொக்கிஷம் நீயல்லவோ
கெட்ட குமாரனைப் போல இஷ்டம் போல் நடந்தேன்
நஷ்டம் அடைந்ததும் புத்தி தெளிந்தேன்
ஓடி வந்தேன் உம் சமூகம் (2)
தொலைவில் நீர் கண்டீர் தொலைந்த என்னையே
ஓடி வந்தனைத்திட்டீரே!
இழந்த என்னை இரட்சித்தீரே
ஜெயம் கொண்டு ஜீவிக்கவே
ஆவியால் அபிஷேகிப்பீர் - தினம்
0 கருத்துகள்