மன்னாதி மன்னனே உன்னத தெய்வமே | Tamil Christian Song

மன்னாதி மன்னனே உன்னத தெய்வமே 

மண்ணான என்னையே மறுரூபமாக்கினீர் 


உந்தன் இரத்தம் சிந்தினீர் 

எந்தன் வாழ்வை மாற்றினீர் - என்னை 

உந்தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டீர் 

எந்தன் நாளும் போற்றுவேன் 

உம்மை வாழ்த்தி வணங்குவேன் (2)

உந்தன் அன்பை என்றும் கூறிடுவேன் 


எந்தன் சோர்வு நேரத்தில் 

உந்தன் மார்பில் சாருவின் - எந்தன்

கைகள் தலைந்தாலும் பெலன் தந்தீர் 

கரம் நீட்டித் தூக்கினீர் 

கண்ணீர் யாவும் மாற்றினீர் (2)

எந்த நாளும் உம்மை துதிப்பேன் ஆண்டவரே 


நீரே எந்தன் நம்பிக்கை 

நீங்க நித்தியாகி கன்மலை 

எனக்கெதிராகப் பலர் பேசினாலும் 

உம்மைப் பற்றி வாழுவேன் 

உந்தன் சித்தம் செய்திடுவேன் (2)

உம் வேதம் சொல்லும் 

கட்டளையை கைக்கொள்ளுவேன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்