Ennaip Belappaduththum Yesu Kiristhuvaal | என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் Lyrics
என்னைப் பெலப்படுத்தும்
என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்
கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில்
இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்
படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது
கேடு வரும் நாளினிலே கூடார மறைவினிலே
மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்
எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்
Ennaip Belappaduththum Yesu Kiristhuvaal
Ellaamae Seydhu Naan Mudiththiduven
Karththar En Velichchamum Enadhu Meetpumaanar
Avarae Jeevanum Vaazhvin Belanumaanar
Theeyor En Udalai Vizhunga Nerungugaiyil
Idari Vizhundhaargal Illaamal Ponaargal
Padaiyae Enakkedhiraai Paalaiyam Iranginaalum
En Nenjam Anjaadhu Nambikkai Izhakkaadhu
Kedu Varum Naalinilae Koodaara Maraivinilae
Maraiththu Vaiththiduvaar Paadhugaaththiduvaar
Enakku Edhiraana Manidhar Munnilaiyil
En Thalai Nimirach Seyvaar Vetri Kaanach Seyvaar
Appaavin Koodaaraththil Aanandha Baliyiduven
Paadal Paadiduven Nadanamaadiduven
Naadgal Kooda Kooda Belanum Perugividum
Irumbum Vengalamum Paadhaththin Keezh Irukkum
உரையாடலில் சேர்