Maraname Un Koor Enge | மரணமே உன் கூர் எங்கே Lyrics

மரணமே உன் கூர் எங்கே

மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்கு தந்து விட்டார் சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு சாவாலே வென்றுவிட்டார் மரண பயத்தினால் வாடும் மனிதரை விடுவித்து மீட்டுக் கொண்டார் பயமில்லை மரண பயமில்லை ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார். அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் அழியாமை அணிந்து கொள்ளும் சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் சாவாமை அணிந்து கொள்ளும் இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும் ஆளுகை செய்திடவே இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார் இன்றைக்கும் ஜீவிக்கிறார் கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க கர்த்தர் இயேசு வந்திடுவார் கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் கிறிஸ்துவுக்குள் மரித்தோர் எதிர்கொண்டு சென்றிடுவோம் பூமிக்குரிய கூடாரமான இவ்வீடு அழிந்தாலும் பரமன் கட்டிய நிலையான வீடு பரலோகத்தில் உண்டு அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும் நான் தானே என்று சொன்னவர் அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க சீக்கிரத்தில் வருகின்றார்
Maraname Un Koor Enge Paadhaalame Un Jeyam Enge Maranaththai Jeyiththa Mannavan Yesu Enakkul Vandhuvittaar Saavai Azhiththu Azhiyaa Vaazhvai Enakku Thandhu Vittaar Saavukku Adhipadhi Saaththaanai Yesu Saavaale Vendruvittaar Marana Bayaththinaal Vaadum Manidharai Viduviththu Meettuk Kondaar Bayamillai Marana Bayamillai Jeyameduththaar Yesu Jeyameduththaar Azhivukkuria Ivvudal Oru Naal Azhiyaamai Anindhu Kollum Saavukkuria Ivvudal Oru Naal Saavaamai Anindhu Kollum Irandhor Melum Vaazhvor Melum Aalugai Seithidave Yesu Mariththu Uyirththu Ezhundhaar Indraikkum Jeevikkiraar Kattalai Pirakka Thoodhar Kural Olikka Karththar Yesu Vandhiduvaar Kiristhuvukkul Vaazhvor Kiristhuvukkul Mariththor Edhirkondu Sendriduvom Boomikkuriya Koodaaramaana Ivveedu Azhindhaalum Paraman Kattiya Nilaiyaana Veedu Paralogaththil Undu Agaramum Nagaramum Thodakkamum Mudivum Naan Thaane Endru Sonnavar Avanavan Kiriyaikkuth Thagundha Parisu Alikka Seekkiraththil Varugindraar